கர்நாடகாவில் தடையில்லாமல் வெளியான 'விஸ்வரூபம் 2'

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் தடையில்லாமல் வெளியான விஸ்வரூபம் 2

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை உருவானால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட அமைப்புகள் உடனே, தமிழ்ப் படங்களை வெளியிட மாட்டோம் என எதிர்ப்புக் குரல் ஆரம்பிப்பார்கள். தமிழ்ப் படங்கள் வெளியாகும் தியேட்டர்களுக்குச் சென்று ஏதாவது பிரச்சினை செய்வார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் போது, ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ்நாட்டிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் வெளிவந்த போது சில பிரச்சினைகள் எழுந்தது. ரஜினிகாந்தும் அது பற்றி பேசும் போது கர்நாடக அரசு கவனிக்கும் என்றார். அதன் பின் படம் வெளியானது. அந்த சமயத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவரும் படங்களையும் திரையிட மாட்டோம் என கன்னட அமைப்புகள் தெரிவித்தன.

ஆனால், 'விஸ்வரூபம் 2' படத்திற்கு அவர்கள் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கர்நாடகாவில் 'விஸ்வரூபம் 2' வெளியாகி உள்ளது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் மட்டும் 100 தியேட்டர்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் பெங்களூருவில் மட்டும் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை