கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டம் : ரஜினி, திரையுலகினர் பங்கேற்பு

தினமலர்  தினமலர்
கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டம் : ரஜினி, திரையுலகினர் பங்கேற்பு

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி, நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினர். சிறந்த கதை, திரைக்கதை வசனகர்த்தா. திரைத்துறையில் அவர் ஆற்றிய பணி சிறப்பானது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்சி உள்ளிட்ட திரையுலக அமைப்புகளின் சார்பில் நினைவஞ்சலி கூட்டம், சென்னை,காமராஜர் அரங்கில் நடந்தது.

இந்தக்கூட்டத்தில் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார்.

நாசர், பொன்வண்ணன், விஷால் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, ஜீவா, பாக்யராஜ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், விக்ரம் பிரபு, நடிகைகள் குஷ்பு, குட்டி பத்மினி, ஆர்த்தி கணேஷ், மூத்த நடிகை காஞ்சனா, அம்பிகா, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ரேவதி, ஸ்ரீப்ரியா, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரின் மனைவியும் நடிகையுமான ஜீவிதா, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், டி.சிவா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்று கருணாநிதி உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி பேனா
நிகழ்ச்சியில் பேசிய விஷால், சங்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில், கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது, அவரின் புகழை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்து செல்லும் என்றார்.

நாசர் பேச்சு
கருணாநிதி கதை, வசனம் எழுதிய 5 படங்களில் நான் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன். பராசக்தி படம் மட்டும் வெளியாகமால் இருந்திருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும்.

எஸ்பி.முத்துராமன்
கூத்தாடிகள் என்று அழைப்பட்ட திரையுலகினரை கலைஞர் என்று அழைக்க வைத்தவர் கருணாநிதி, எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்.

மூலக்கதை