மகாநடி படத்திற்கு விருது

தினமலர்  தினமலர்

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான படம் மகாநடி. நாக் அஷ்வின் இயக்கிய இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சமந்தாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்த படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தற்போது நடைபெறும் இந்தியன் சினிமா விழாவில் திரையிடப்பட்டது. அதையடுத்து இந்த படத்திற்கு ஈகுவாலிட்டி ஆப் சினிமா -என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை