இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 15 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 15 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில், நேற்று காலை ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 4 புள்ளிகளாக பதிவானது. மாதரம் என்ற நகரத்தில் இருந்து 50 கி. மீ.

தொலைவில் 7 கி. மீ. , ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

ஏராளமான வீடுகள் இருளில் தவித்தன. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர், சுமார் 160 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

செம்பலூன் நகரில் பல இடங்களில் பொதுமக்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

.

மூலக்கதை