‘இந்தியாவுடன் இணைந்து புதிய சகாப்தம் உருவாக்க தயார்’: பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு இம்ரான் கட்சி வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘இந்தியாவுடன் இணைந்து புதிய சகாப்தம் உருவாக்க தயார்’: பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு இம்ரான் கட்சி வரவேற்பு

பெஷாவர்: இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், இதை இம்ரான் கான் கட்சி வரவேற்று, ‘இணைந்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தயார்’ என்று கூறியுள்ளது. கடந்த 25ம் தேதி பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி, 116 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற அந்த கட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி, அதாவது, அந்த நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதிக்கு முன்னதாக, தான் பதவியேற்க இருப்பதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக இணைந்து செயல்பட 64 இடங்களை கைப்பற்றிய நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல் (நவாஸ்) கட்சியும், 43 இடங்களை கைப்பற்றிய பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் முடிவு செய்துள்ளன.



வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைப்பதால், இம்ரான்கானுக்கு மிகப்பெரும் சவால்கள் காத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, நேற்றிரவு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் என்றும், பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என்று பிரதமர் ேமாடி நம்பிக்கை தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ெவளியிட்ட ெசய்திகுறிப்பில், ‘இந்திய பிரதமர் மோடி, இம்ரான் கானை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தற்கு நன்றி. இருநாடுகளும் இணைந்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதற்காக, பாகிஸ்தான் தயாராக இருக்கிறது’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. மோடி - இம்ரான்கான் போனில் பேசிய விபரங்களில், காஷ்மீர் குறித்து ஏதும் பேசப்படவில்லை என்று, செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.



பாகிஸ்தானின் பிரமதராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி வந்த போது பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின், தற்போது தான் இருவரும் போனில் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின், பிரதமர் மோடி, இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்ததை அரசியல் நோக்கர்கள் வேறுவிதமாக பேசி வருகின்றனர்.
ஆனால், இந்திய வெளியுறவு துறை வெளியிட்ட செய்தியில், ‘தேர்தல் முடிவுகள் வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில், பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்ெபற வேண்டும்.

ெதற்கு ஆசியாவில் தீவிரவாதம், வன்முறை அற்ற நிலை ஏற்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

.

மூலக்கதை