பொதுமன்னிப்பு திட்டம் அபுதாபியில் அறிமுகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொதுமன்னிப்பு திட்டம் அபுதாபியில் அறிமுகம்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: அமீரகத்தில் விசா காலாவதியாகி சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்பு நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 மாதம் அமலில் இருக்கும்.

எனவே, அமீரகத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் தாங்களாக முன் வந்து பொது மன்னிப்பை பெற்று வெளியேறலாம். அமீரகத்தில் வசித்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டவர் அல்லது காலாவதியான நிலையில் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் தங்கள் நாட்டின் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்திடம் விண்ணப்பித்து வெளியேறும் அனுமதி கடிதம் (அவுட் பாஸ்) பெற வேண்டும்.

அந்த கடிதம் பெறுவதற்கு தூதரகங்கள் அல்லது துணைத்தூதரகங்களிடம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு அடுத்த 10 நாட்களில் பயணத்தடை இல்லாமல் வெளியேறுவதற்கான அனுமதி (எக்சிட் பர்மிட்) வழங்கப்படும்.

இதில் அந்த அவுட் பாஸ் பெறுவதற்கு பல்வேறு நாட்டு தூதரகங்கள் சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளன.

இந்திய தூதரகம் பொது மன்னிப்பு பெற்று பண வசதி இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக அவுட் பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை