நேபாளில் தவிக்கும் 200 பக்தர்கள்: இந்திய தூதரக அதிகாரிகள் ‘அலர்ட்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேபாளில் தவிக்கும் 200 பக்தர்கள்: இந்திய தூதரக அதிகாரிகள் ‘அலர்ட்’

காத்மாண்டு: மோசமான வானிலையால் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200 பக்தர்களை மீட்க, இந்திய தூதரக அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற பக்தர்கள் 200 பேர் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் சிக்கி தவிக்கின்றனர்.

இவர்களிடம், நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதேபோல், புனித யாத்திரை சென்ற பக்தர்களின் குடும்பத்தினருடனும் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.   ேமலும், மத்திய அரசு, தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, விழிப்புடன் செயல்பட்டு யாத்ரீகர்களை மீட்க அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது: சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன.

அவர்களுக்கு  ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதனால், சிக்கியுள்ள 200 பேர் பற்றி உறவினர்கள் அச்சப்பட தேவையில்லை.

வானிலை சீரடைந்த பின்னர் விமானங்களை அனுப்பி பாதுகாப்புடன் மீட்டு வருவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


.

மூலக்கதை