நிலநடுக்க பலி 82 ஆக உயர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை: மக்கள் பீதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலநடுக்க பலி 82 ஆக உயர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை: மக்கள் பீதி

லோம்பாக்: இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 82 பேர் பலியாகிய நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடான இந்தோனேசியாவை சுற்றியும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் உள்ளன.

இப்பகுதியில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் திடீெரன பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. இதனால், கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.



பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன.

மின்கம்பங்களும் சாய்ந்தன. அடுத்தடுத்த சில நிமிடங்களில், ஒட்டுமெத்த கடற்கரை நகரமும் நிர்மூலம் ஆகியது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து, தேசிய ேபரிடர் முகமை செய்தி தொடர்பாளர் அடோபோ புரூர்வோ நுக்ரோகோ கூறியதாவது: இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 82 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6. 9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. ஆக கூறப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன.

முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களை கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. லோம்போக் தீவின் முக்கிய நகரமான மடாரம்மில் கடுமையான அதிர்வை உணரப்பட்டது.

கடந்த வாரம் இதே பகுதியில் 6. 4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

2004ல் சுனாமி தாக்குதல்: கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலை தாக்குதலில், 2,26,000 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழகத்தில் 8,000 பேர் என்று தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.

தற்போது, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் 82 பேர் பலியாகி உள்ளனர். தற்ேபாது அப்பகுதிக்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

.

மூலக்கதை