வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற 6 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற 6 பேர் கைது

கராகஸ்: வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ராணுவ நிகழ்ச்சியில், சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) வெடிக்க செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக நிகோலஸ் மதுரோ காயமின்றி உயிர் தப்பினார்.

எனினும், பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து, வெனிசுலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் கூறுகையில், ‘‘தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைகளில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன’’ என்றார்.

.

மூலக்கதை