திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் ? என்று நீதிபதி கேள்வி

தினகரன்  தினகரன்
திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் ? என்று நீதிபதி கேள்வி

சென்னை : கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் ? என்று நீதிபதி பிரகாஷ்  கேள்வி எழுப்பினர். மேலும் திருமுருகன் காந்தி பேச்சு எந்த வகையில் பிரிவினையை ஏற்படுத்தியது எனவும் நீதிபதி கேட்டுள்ளார். பிரிவினையை ஏற்படுத்தும் விடியோவை ஏன் 64 நாட்கள் தடை செய்யவில்லை என்று போலீசாரிடம் நீதிபதி வினவினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு மற்றும் சேலம் 8வழி சாலைக்கு எதிராக ஐநா சபையில் பேசிய திருமுருகன் காந்தி நேற்று கைது செய்யப்பட்டார்.

மூலக்கதை