குழந்தை கடத்தலை தடுக்க கோரிய வழக்கு : தமிழக அரசு மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தினகரன்  தினகரன்
குழந்தை கடத்தலை தடுக்க கோரிய வழக்கு : தமிழக அரசு மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை : குழந்தை கடத்தலை தடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் பதில் அறிக்கையில் திருப்தி இல்லை என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மீண்டும் விளக்கமான அறிக்கையை ஆகஸ்ட் 24ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை