முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

தினகரன்  தினகரன்
முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

டெல்லி : முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தப்பட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முந்தைய மசோதாவில் முஸ்லிம் ஆண்களை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவில் கைது செய்ய வழிவகை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் ஜாமின் கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றவுடன் முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆன் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், இதில் உரிய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டது. முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் படி பாதிக்கப்படும் நபர் நீதிமன்றத்தை அணுகி முறையிட முடியும். மைனர் குழந்தைகள் பெண்ணின் பாதுகாப்பில் இருக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை