கேரளாவை தொடர்ந்து மிரட்டும் மழை: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
கேரளாவை தொடர்ந்து மிரட்டும் மழை: பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.இந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான சம்பங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பலத்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் இருந்து துணை ராணுவத்தினர் விரைந்தனர். இதேபோல் சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 45 பேர் கேரளா சென்றனர். அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில்,தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மூலக்கதை