திருமதி அமுதா பெரியசாமி IAS

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திருமதி அமுதா பெரியசாமி IAS

திருமதி அமுதா பெரியசாமி IAS தேனீ மாவட்டத்தை சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்த IAS அதிகாரிகளில் இவரும் ஒருவர்.1997 - 1998 ல் ஈரோடு மாவட்ட திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர். 


அவரும் அன்று பணியாற்றிய திரு.கருப்பையா பாண்டியன், IAS அவர்களும் எனது இல்லத்திற்கும், எனது கிராமத்திற்கும், பல பொது காரியங்களுக்காக பலமுறை வந்து இருக்கின்றனர். 

அன்று முதல் இன்று வரை மிக நேர்மையாகவும், ஏற்கும் பணியை சிறப்பாக செப்பனே ஆற்றி பெருமை சேர்ப்பவர் திருமதி. அமுதா பெரியசாமி IAS .

 

சாமானியன், ஏழை, கீழ்த்தட்டு மக்களின் சிரமங்களை உணர்ந்து என்றுமே தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு உன்னதமான அதிகாரி.

 

2004 ஆம் வருடம் சுனாமிக்கு பின் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவராக மிக சிறந்த சேவையை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றியவர். அதே போல சென்னை வெள்ளத்தின் போது அக்கரமிப்பு செய்து இருந்த பெரும் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெரும் செல்வாக்குடையவர்களின் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு பல ஆயிரம் மக்களின் உயிரையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும், காப்பாற்றியவர். சென்னை தாம்பரம் அருகே JCB வாகன ஓட்டுநர் பெரும் அரசியல்வாதிகள் மிரட்டலுக்கு உள்ளாக்கி பணியை நிறுத்தியபோது, தானே வாகனத்தை இயக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றியவர்.

 

கடந்த வருடம் PRIDE OF TAMILNADU விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான பிரிவில் விருதை நான் பெரும் பொழுது, நான் பெற்ற அந்த விருதை விட, அதிகாரிகளுக்கான பிரிவில் திருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களுடன் சேர்ந்து பெற்றதனாலேயே பெரும் உவகை கொண்டேன்.

 

நேற்றும் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு பிறகு தமிழக அரசின் நன்முடிவாய் ஒரு நேர்மையான அதிகாரியான,திருமதி.அமுதா பெரியசாமி IAS , தனி சிறப்பு அதிகாரியாய் நியமித்து (OSD) அரசு சார்பாக ஆயத்த பணிகளையும் ஒருங்கிணைப்பு பணிகளையும் அவர் செயல் ஆற்றியதையும் கண்டு நெஞ்சம் மகிழ்கிறது. இறுதியாய் அவரும் ஒரு பிடி மண்ணை தந்து கலைஞரின் அடக்கத்திற்கு மரியாதையை செய்து வணங்கி நடந்தது பொழுது அவரது பண்பிற்கான எடுத்துக்காட்டாகவே அது அமைந்தது.

திருமதி. அமுதா பெரியசாமி IAS அவர்களை முன்னோடியாக கொண்டு, நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் பணிபுரிய வேண்டும் என பல இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

 

தமிழுக்கும் தமிழர்க்கும் அவரது சேவை தொடரட்டும்.

 

வாழ்க பல்லாண்டு !!

 

- கார்த்திகேய சிவசேனாபதி 
09 /08 /2018

மூலக்கதை