முதல் தேர்வு... முழுமதிப்பெண்... 96 வயதில் அசத்தும் கார்த்தியாயினி அம்மாள் !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முதல் தேர்வு... முழுமதிப்பெண்... 96 வயதில் அசத்தும் கார்த்தியாயினி அம்மாள் !!

"கல்வி அறிவை பெறுவதற்கு வயது ஒரு தடையே இல்லை" என்ற இந்த கூற்றை இன்றைய இளம் தலைமுறையினருக்கு மெய்ப்பிக்கும் விதமாக கேரளாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மாணவி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அதில் முழு மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். 


கேரளாவின் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா, இவர் அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படும், முதியவர்கள் கல்வியறிவு பெரும் திட்டம் ஒன்றில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்  நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சதி என்ற ஆசிரியர் கல்வி கற்பித்து வருகிறார். இவர் கார்த்தியாயினி அம்மா வீட்டிற்கு அருகில் இருப்பதால், அவரது வீட்டிற்கே வந்து சதி பாடம் கற்பிக்கிறார். அவருடன் மற்ற சில முதியவர்களும் கல்வி கற்கின்றனர். அவர்களும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நன்றி : The News Minute

சமீபத்தில் இந்த முதிய மாணவர்களுக்கு தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 


தன் வாழ்நாளில் முதல் தேர்வை எழுதியுள்ள கார்த்தியாயினி அம்மாள்  வாசிப்பு பகுதியில் 30/30 என முழுமதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மற்ற இரண்டு பாடங்களில் அவர் பெற்ற மதிப்பெண்கள், விடைத்தாள் திருத்தத்திற்குப் பிறகு தெரியவரும்.  


இதுதொடர்பாக பேசியுள்ள கார்த்தியாணி அம்மாள், தான் படித்தது முழுமையாக கேள்வித்தாளில் கேட்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதைத்தொடர்ந்து தான் ஆங்கிலம் கற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த 96 வயது மாணவி..


மூலக்கதை