2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் இப்போதே மாற்றிக்கொள்ளலாம் !!

வங்கிகளில் இப்போதே, 2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது 2005ஆம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. எனவே, இப்போதிலிருந்தே 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுக்களை திரும்பபெறுவது என்பது, சர்வதேச அளவில் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகும், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை வாயிலாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம்'' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை