14-வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
14வது ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ நாளை துவங்குகிறது!

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் 14வது ஈரோடு புத்தகத் திருவிழா நாளை(ஆகஸ்ட் 03) துவங்கி வரும் 14ம் தேதி வரை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

12 நாட்கள் நடைபெறும் இந்த அறிவுத் திருவிழாவில், 230-க்கும் அதிகமான  புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட இருக்கின்றன. மேலும், இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளர்களுடைய படைப்புகளை விற்பனை செய்வதற்கென ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’, புதிய புத்தகங்களை வெளியிட விரும்புவர்களுக்கென ‘புத்தக வெளியீட்டு அரங்கம்’, படைப்பாளிகள் வாசகர்களிடையே உரையாடுவதற்கென ‘படைப்பாளர் மேடை’ போன்றவையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விழா நடைபெறும் ஒவ்வொருநாள் மாலையும் உலகில் தலைசிறந்த தமிழ் சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்டு, சொற்பொழிவாற்ற இருக்கின்றனர். தினமும் காலை 11 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கென நுழைவுக் கட்டணம் என்று எதுவும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம். அதுபோக புத்தகங்களுக்கு 10% தள்ளுபடியும் வழங்கப்படும்.

மூலக்கதை