விம்பிள்டன் அரையிறுதியில் இன்று 40வது முறையாக பெடரர்-நாடல் மோதல்

தினகரன்  தினகரன்
விம்பிள்டன் அரையிறுதியில் இன்று 40வது முறையாக பெடரர்நாடல் மோதல்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகளில் இன்று நடைபெற உள்ளன. இதில் 40வது முறையாக முன்னணி வீரர்களான பெடரர்-நாடல் ஆகியோர் மோத உள்ளனர். இன்னொரு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரர் டிஜோகோவிச் - பாடிஸ்டா ஆகியோர் விளையாடுகின்றனர். காலிறுதிப் போட்டி ஒன்றில்  முதல்நிலை வீரரான நோவக் டிஜோகோவிக்(செர்பியா) 6-4, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் 21ம் நிலை வீரர் டேவிட் கோஃப்பினை(பெல்ஜியம்) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். மேலும் 23ம் நிலை வீரர் பாடிஸ்டா அகுத்(ஸ்பெயின்), 26ம் நிலை வீரர் கிய்டா பெல்லோ(அர்ஜென்டீனா)வை  7-5, 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் போராடி வென்றார்.அதேபோல் மற்றொரு காலிறுதிப் போட்டிகளில் 3ம் நிலை வீரர் ரபேல் நாடல், 59ம்நிலை வீரர் சாம் க்வர்ரியை(அமெரிக்கா) 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். தொடர்ந்து 2ம் நிலை வீரர் ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து) 4-6, 6-1, 6-4, 6-4 என்ற செட்களில், 8ம் நிலை வீரர் கேய் நிஷிகோரியையும்(ஜப்பான்) வென்று அரையிறுதிக்கு முன்னேறினர். இந்த காலிறுதிப் போட்டிகளுக்கு பிறகு நாடல் 2வது இடத்துக்கு முன்னேறினார். பெடரர் ஒரு 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் மோத  உள்ளனர். இது பெடரர்-நாடல் இருவரும் மோத உள்ள 40வது ேபாட்டியாகும். மற்ெறாரு அரையிறுதியில் டிஜோகோவிக்-பாடிஸ்டா ஆகியோர் விளையாட உள்ளனர்.

மூலக்கதை