இதெல்லாம் நியாயம் தானா?

தினமலர்  தினமலர்
இதெல்லாம் நியாயம் தானா?

'பொழுதுபோக்கு என்ற பெயரில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, கடுப்பேற்றாதீர்கள்' என, கொந்தளிக்கிறார், பாலிவுட் நடிகை, தியா மிர்சா. இவர்,





ஐக்கிய நாடுகள் சபை சார்பில், சுற்றுச்சூழல் துறைக்கான, நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமீபகாலமாக, சமூக வலைதளங்களில், 'பாட்டில் கேப் சேலஞ்ச்' என்ற பெயரில், ஒரு விளையாட்டு, வேகமாக பரவி வருகிறது. மேஜையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியை மட்டும், காலால் உதைத்து, திறக்க வேண்டும். ஏராளமான பிரபலங்கள், இந்த விளையாட்டை, ஒரு சவாலாக எடுத்து, செய்து வருகின்றனர்.



இதைப் பார்த்து தான், ஆவேசப்படுகிறார், தியா மிர்சா. 'பிளாஸ்டிக் பாட்டில்களால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதாக, வாய் வலிக்க பிரசாரம் செய்து வருகிறோம். சினிமா பிரபலங்களே, பிளாஸ்டிக் பாட்டில்களை பிரபலப்படுத்தினால், மற்றவர்களும், அதை பின்பற்ற மாட்டார்களா' என, கோபப்படுகிறார், தியா.

மூலக்கதை