தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பாதிப்பு

தினமலர்  தினமலர்
தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி பாதிப்பு

தமி­ழக அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டத்தை, உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­துள்­ள­தால், தொழிற்­சா­லை­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்த இருந்த, 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் எடுக்­கும் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.



அரசு திட்­டங்­க­ளுக்­காக கைய­கப்­ப­டுத்­தப்­படும் தனி­யார் நிலங்­க­ளுக்கு, நியா­ய­மான இழப்­பீடு வழங்­கும் வகை­யில், ‘நியா­ய­மான இழப்­பீடு, வெளிப்­ப­டைத் தன்மை, மறு­வாழ்வு மற்­றும் மறு குடி­ய­மர்வு’ என்ற சட்­டத்தை, 2013ல், மத்­திய அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.




புதிய சட்­டத்­தில் இருந்து, மாநில அர­சின் நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டங்­க­ளான, மாநில நெடுஞ்­சா­லை­கள் சட்­டம், தொழில் பயன்­பாட்­டிற்­கான நிலம் கைய­கப்­ப­டுத்­தும் சட்­டம் மற்­றும் ஹரி­ஜன் நலச் சட்­டம் போன்ற சட்­டங்­க­ளுக்கு விலக்கு பெறும் வகை­யில், 2015ல், 105 (அ) என்ற புதிய சட்­டப் பிரிவை தமி­ழக அரசு சேர்த்­தது.



இந்­நி­லை­யில், தமி­ழக அரசு இயற்­றிய புதிய பிரிவை ரத்து செய்து, சென்னை, உயர் நீதி­மன்­றம் சமீ­பத்­தில் உத்­த­ர­விட்­டது.இதன்­படி, கைய­கப்­ப­டுத்­தும் பணி­கள் முடிந்­தி­ருந்­தால், இந்த தீர்ப்பு பொருந்­தாது என­வும் குறிப்­பி­டப்­பட்­டுஉள்­ளது.இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:



நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து, 2013, ஆக.,க்கு பின், நிலம் கைய­கப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பணி­கள் அனைத்­தும் பாதிக்­கப்­பட்­டுள்ளன.இத­னால், 10 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.தொழிற்­சா­லை­கள் அமைக்க போதி­ய நிலம் இருந்­தால் மட்­டுமே, பெரு நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் முத­லீடு செய்ய முன் வரு­ம்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.


– நமது நிரு­பர் –

மூலக்கதை