லூசியானா மாநிலத்தில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
லூசியானா மாநிலத்தில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின், லூசியானா மாநிலத்தில் உள்ள நியூர் ஓர்லென்ஸ் நகரம், புயல், கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. வளைகுடா கடற்கரையில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, இங்கு மிக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புயலால் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.  மேலும் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிசிசிப்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மூலக்கதை