தோனி–ஜடேஜா ‘பெஸ்ட்’ ஜோடி | ஜூலை 10, 2019

தினமலர்  தினமலர்
தோனி–ஜடேஜா ‘பெஸ்ட்’ ஜோடி | ஜூலை 10, 2019

 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் பேட்டிங் ஆர்டரில் 7 வது விக்கெட் அல்லது அதற்குப் பின் இணைந்து அதிக ரன் சேர்த்த ‘நம்பர்–1’ ஜோடி என்ற பெருமை தோனி–ஜடேஜாவுக்கு கிடைத்தது. நேற்று இவர்கள் 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தனர். இதற்கு முன் 2007, அரையிறுதியில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தின் பிராங்க்ளின், படேல் இணைந்து 10 விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்தனர்.

* உலக கோப்பை தொடர் அரையிறுதியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய ஜோடி ஆகினர் தோனி–ஜடேஜா. 2003 ல் கென்யாவுக்கு எதிராக சச்சின்–கங்குலி ஜோடி (2வது விக்.,) 103 ரன்கள் எடுத்தது.

* உலக கோப்பை போட்டிகளில் 7 வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமை தோனி–ஜடேஜாவுக்கு (116 ரன்) கிடைத்தது. இதற்கு முன் சயீத் அன்வர், ஜாவேத் ஜோடி (பாக்.,) 107 ரன் (அயர்லாந்து, 2015) எடுத்திருந்தது.

 

2

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இரண்டு முறை ரன் அவுட்டான முதல் வீரர் ஆனார் தோனி. இவர், 2015ல் 65, 2019ல் 50 ரன் எடுத்த ரன் அவுட்டானார்.

 

மீண்டும் ‘ரன் அவுட்’

சர்வதேச அரங்கில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (2004) அறிமுகம் ஆனார் தோனி 38. இப்போட்டியில் ரன் எடுக்காமல் ரன் அவுட்டானார்.

தற்போது உலக கோப்பை தொடருடன் ஒருநாள் அரங்கில் இருந்து விடை பெறுவார் தோனி என நம்பப்படுகிறது. இது தொடர்பாக உறுதியான செய்திகள் எதுவும் வரவில்லை. இருப்பினும் நேற்று தோனி 50 ரன்னுக்கு ரன் அவுட்டானது சற்று வித்தியாசமாக உள்ளது. 

மூலக்கதை