வீடியோ கேமை நம்பு: பாக்.,தலைவர் 'பல்பு'

தினமலர்  தினமலர்
வீடியோ கேமை நம்பு: பாக்.,தலைவர் பல்பு

இஸ்லாமாபாத்: அரசியல் தலைவர்கள் என்றாலே, புதிய அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்த எந்தவித ஞானமும் இன்றி இருப்பார்கள் என்பதற்கு பாகிஸ்தானில் நடந்துள்ள சம்பவமே சான்றாகும்.

பல்பு வாங்கிய தலைவர்


போயிங் விமானம் ஒன்று எரிபொருள் லாரியுடன் மோத நெருங்குவது போன்ற வீடியோவை உண்மை என்று நம்பி பதறிய பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர், எழுதிய ட்வீட் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

வீடியோ கேம் :

கிராண்ட் தெப்ட் ஆட்டோ 5 (Grand Theft Auto 5) என்ற வீடியோ கேம் இணையத்தில் மிகவும் பிரபலம். இந்த விளையாட்டில் அந்த விமானம் ஓடு தளத்தில் இருந்து மேலெழும்பும் போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கான விளம்பரம் ஒன்றும் அந்த இணையத்தில் வெளியாகி இருந்தது.

குர்ரம் நவாஸ் டுவீட் :

இதனை உண்மைச் சம்பவம் என்று பீதியடைந்த பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச் செயலாளர் குர்ரம் நவாஸ் என்பவர், விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி விட்டதாகவும், இதற்கு விமானியின் சாமர்த்தியமே காரணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது விளையாட்டு என்பதை பலரும் எடுத்துச் சொன்ன பின்னரே தனது பதிவை அவர் நீக்கியுள்ளார்.


அரசியல் தலைவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் எந்தவித அப்டேட்டும் இல்லை என்பதற்கு குர்ரம் நவாஸ் சிறந்த உதாரணம் என்று இளைஞர்கள் இணையதளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.


மூலக்கதை