விராட் கோஹ்லியா? கேன் வில்லியம்ஸனா? அரையிறுதியில் நாளை இந்தியா - நியூசிலாந்து மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் கோஹ்லியா? கேன் வில்லியம்ஸனா? அரையிறுதியில் நாளை இந்தியா  நியூசிலாந்து மோதல்

மான்செஸ்டர்: உலககோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியும், நான்காம் இடத்தில் உள்ள அணியை அரையிறுதியில் எதிர்த்து விளையாடும்.

இதன்படி நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

உலககோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 8 முறை அரையிறுதி போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. இந்திய அணி 7 முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், அரையிறுதியில் மோதும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது இந்திய அணியை கேப்டன் விராட் கோஹ்லியும், நியூசிலாந்து அணியை கேப்டன் கேன் வில்லியம்ஸனும் வழிநடத்துகின்றனர்.

2008ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணி கோஹ்லி தலைமையில் களமிறங்கியது. அதேபோல் நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்ஸன் வழிநடத்தினார்.



அந்தத் தொடரில் இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் விளையாடியதில், இந்திய அணி வெற்றிபெற்றது. தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.

இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கோஹ்லி ரசிகர்கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பேரும் உலககோப்பை தொடரின் அரையிறுதியில் கேப்டன்களாக சந்திக்கின்றனர். வில்லியம்ஸன் தனது பழைய கணக்கை தீர்ப்பாரா இல்லை கோஹ்லி ஆதிக்கம் செலுத்துவாரா என்று நாளை தெரிந்துவிடும்.



மான்செஸ்டரில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை காண, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல் குறித்து, தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு  பிளிசிஸ் கூறுகையில், ‘‘நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா  நிச்சயம் சந்தோசம் அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால்,  நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது.   இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட  வாய்ப்புள்ளது’’ என்றார்.


.

மூலக்கதை