கிராண்ட்ஹோம் - நீஷம் ஜோடி போராட்டம் வீண் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
கிராண்ட்ஹோம்  நீஷம் ஜோடி போராட்டம் வீண் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

பர்மிங்காம்: நியூசிலாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கப்தில், மன்றோ இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 5 ரன் மட்டுமே எடுத்து ஆமிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.மன்றோ 12 ரன், டெய்லர் 3, லாதம் 1 ரன் எடுத்து ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து 12.3 ஓவரில் 46 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் வில்லியம்சன் 41 ரன் (69 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஷதாப் கான் பந்துவீச்சில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். நியூசிலாந்து 26.2 ஓவரில் 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்ததால், விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீஷம் - கிராண்ட்ஹோம் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 132 ரன் சேர்த்தது. உலக கோப்பை போட்டிகளில் 6வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் சாதனையாக இது அமைந்தது.கிராண்ட்ஹோம் 64 ரன் (71 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. நீஷம் 97 ரன் (112 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரிடி 3, ஆமிர், ஷதாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணி 49.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து வென்றது. பாபர் அசாம் அதிகபட்சமாக 101 ரன் (127 பந்து, 11 பவுண்டரி) விளாசினார். ஹாரிஸ் சோகலை் 68 ரன் எடுத்தார்.

மூலக்கதை