ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் ஜூலை.26ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை: டெல்லியில் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் ஜூலை.26ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை: டெல்லியில் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது கைவிட வேண்டும் எனக்கூறி பிரதமர் அலுவலகத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மறுத்தால் வருகிற ஜூலை 26ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.  இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசு வேதாந்தாவுக்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏன் அனுமதி வழங்கியுள்ளது என்பது தெரியவில்லை. தமிழகத்தில் 97 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும்,  274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோகார்பன் எடுக்க 300 ஹெக்டேர் நிலங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்பது உன்மையாகும். இருப்பினும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இப்படி தவறான தகவல்களை தெரிவித்து வருகிறது. இதில் ஜூலை 26ம் தேதி நடத்த உள்ள போராட்டத்திற்கு முன்னதாக 25ம் தேதி டெல்லியில் உண்ணாவிரத போராட்டமும் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

மூலக்கதை