சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்

தினகரன்  தினகரன்
சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்

புதுடெல்லி: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடப்பதால் தொழில் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் தொழிலை தொடர்ந்து நடத்தவும் வசதியாக சீனாவில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு பல்வேறு வர்த்தகச் சலுகைகள்,  ஊக்கத் தொகைகள் கொடுத்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.நிதி சலுகைகள், ஊக்கத் தொகை மற்றும் வியட்நாம் அளிப்பது போல் வரி விடுமுறை காலம் போன்றவற்றை அளித்து தொழில் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், காலணிகள், பொம்மைகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் அளித்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் வர்த்தக துறை அமைச்சகத்தின் ஆவணங்கள் அடிப்படையில் மேற்கண்ட தகவலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வரிச்சலுகைகள் அளி  த்து தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் அடைந்துள்ளன. இந்த வழியில் இந்தியா தொழில் முதலீடுகளை கவர்வதில் பின்தங்கியுள்ளது. வர்த்தக துறை அமைச்சகம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால் புதிய நிதியமைச்சரின் ஒப்புதலை பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக துறை அமைச்சகம் உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் தொழில் தொடங்குவதற்கு வசதியாக, கடற்கரை நகரங்களில் தொழிற்சாலை மண்டலங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இதன் மூலம் ஊக்கத் தொகை கொடுத்து அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு சுற்றறிக்கையை வர்த்தக துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த திட்டம், இந்தியாவின் உற்பத்தி தொழிலை மேம்படுத்த உதவும் இதன் மூலம் பிரதமரின் முன்னுரிமை திட்டமான ‘மேக் இன் இந்தியா’ பெரிதும் பயன்படும். வரும் 2020ல் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்கு 25 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் சீனாவுடனான பெரும் வர்த்தக பற்றாக்குறை குறையும் என்று நம்பப்படுகிறது.சீனாவில் இருந்து 95 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் .ஸ்மார்ட் போன், நுகர்வோர் வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், பேர்பார்ட்ஸ், தினசரி பயன்படுத்தப்படும் பெட் லினென், கிச்சன்வேர் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் சீன கம்பெனிகள் முதலீடு செய்யும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அந்நிய நேரடி முதலீடு கொள்கையை கவனிக்கும் தொழில் துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை