சேலம் உருக்காலை நிறுவனம், எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட 28 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க முடிவு

தினகரன்  தினகரன்
சேலம் உருக்காலை நிறுவனம், எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட 28 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்க முடிவு

டெல்லி: சேலம் உருக்காலை நிறுவனம்,  எண்ணூர் துறைமுகம் உள்பட 28 பொதுத்துறை நிறுவனகளை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை மத்திய அமைச்சர் அரவிந்த் கன்பத் சாவந்த் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக அரவிந்த் கன்பத் சாவந்த் பதிலளித்தார். அவர் நலிவடைந்த மற்றும் நட்டத்தில் இயங்கி வரும் எச்எம்டி வாட்சஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் 19 பொதுத்துறை நிறுவனங்களை மூட ஒப்புதல் அளிக்கப்பட்ட்டுள்ளதாக கூறினார். அதே போன்று ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்கள், சேலம் உருக்காலை, எண்ணுரில் உள்ள காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட 28 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து மத்திய அரசின் முதலீட்டை விலைக்கு கொண்டு தனியார் மயமாக்க கொள்கை இல்லாத ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். போட்டி நிறைந்த சந்தையை எதிர்க்கொள்ள முடியாதது மூலதனத்தை அதிகரிக்க வேண்டியது மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மாறவேண்டியது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை