பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வைர வணிகர் மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்

தினகரன்  தினகரன்
பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வைர வணிகர் மெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்

ஆண்டிகுவா: வாங்கி கடன் மோசடியில் தேடப்படும் வைர வணிகர் மெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது உறுதி என ஆண்டிகோ நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 14,000ம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வணிகர்களும் உறவினர்களான நீரவ் மோடியும், மெகுல் சோக்சியும் வெளிநாட்டு தப்பி சென்று விட்டனர். இதில் மெகுல் சோக்சி கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்புடாவில் உள்ளார். முதலீட்டின் அடிப்படையில் குடியுரிமை பெற்ற ஆண்டிகுவா மற்றும் பார்புடா நாட்டில் வாழ்ந்து வரும் மெகுல் சோக்சியை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக மெகுல் சோக்சி ஆண்டிகுவா மற்றும் பார்புடா நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு ஆண்டிகுவா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மெகுல் சோக்சி குடியுரிமை பெற்று இருந்தாலும் அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுவது உறுதி என்று ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவ்னி தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி சார்ந்த குற்றங்களில் தொடர்புடைய கிரிமினல்களுக்கு தஞ்சம் அளிக்க தங்கள் முயற்சி செய்யவில்லை என்றும் ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவ்னி கூறியுள்ளார். அதே சமயம் கிரிமினல்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பதால் மெகுல் சோக்சி நீதிமன்றம் சென்றிருப்பதாகவும், சட்டம் அதனுடைய வழியில் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மெகுல் சோக்சி தனக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியப் பிறகு அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என உறுதி அளிப்பதாகவும் ஆண்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவ்னி கூறியுள்ளார்.

மூலக்கதை