கேரளாவில் இருந்து நியுசிலாந்து சென்ற 164 பேர் மாயம்: கண்டுபிடித்து தர மத்திய அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
கேரளாவில் இருந்து நியுசிலாந்து சென்ற 164 பேர் மாயம்: கண்டுபிடித்து தர மத்திய அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை

டெல்லி: நியூசிலாந்தில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக சென்று மாயமான இந்தியர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த 164 பேர் கடந்த ஜனவரி மாதம் கேரளாவின் முனம்பம் துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் நியூசிலாந்து புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டும் அவர்களிடமிருந்து எந்தவொரு தகவல்களும் வரவில்லை என உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் கலக்கம் அடைந்துள்ள உறவினர்கள் மயமானவர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து சட்டவிரோதமாக நியூசிலாந்து சென்ற இந்தியர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மத்திய அரசானது மாயமானவர்களை  மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பலர் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் குடியேற முயன்று சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை