ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்

தினமலர்  தினமலர்
ஜிவி பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து பாடலாசிரியராகவும், பாடகராகவும் மாறியவர் தனுஷ். இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ் குமார். தனுஷ் நடித்த 'ஆடுகளம், மயக்கம் என்ன' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக அறிமுகமான பின் தனுஷுக்கும், ஜிவிக்கும் இடையில் ஏதோ உரசல் ஏற்பட்டது. இயக்குனர் வெற்றிமாறன் எப்போதுமே ஜிவி பிரகாஷைத்தான் தன் படங்களக்கு இசையமைப்பாளராக வைத்துக் கொள்வார். ஜிவிக்கும், தனுஷுக்கும் இடையில் மோதல் என்பதால், 'வட சென்னை' படத்திற்குக் கூட சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையில், வெற்றிமாறன், தனுஷ் மீண்டும் இணைந்துள்ள 'அசுரன்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்போது 'அசுரன்' படத்திற்காக 'பொல்லாத பூமி...' என்ற பாடலை ஜிவி இசையில் தனுஷ் பாடியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மூலக்கதை