ஜூலை 5ந் தேதி வருகிறார் களவாணி 2

தினமலர்  தினமலர்
ஜூலை 5ந் தேதி வருகிறார் களவாணி 2

விமல். ஓவியா நடித்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் 2ம் பாகம் ரிலீசுக்கு ரெடியாகி 4 மாதம் ஆகிறது. ஆனால் பல பிரச்னைகள் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்தது. பிரச்சினைகளில் சில...

களவாணி படத்தை தயாரித்த நசீர் அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பதாக அறிவித்தார். ஆனால் வேறு இயக்குனர், வேறு நடிகர், நடிகைகள். அதே நேரத்தில் இயக்குனர் சற்குணம் களவாணி படத்தை தொடங்கினார்.

படத்தை விமல் தயாரிப்பதாக முதலில் அறிவிப்புகள் வெளிவந்தது. இடையில் திடீரென தயாரிப்பாளர் விமல் அல்ல இயக்குனர் சற்குணம் என்றார்கள். இந்த நேரத்தில் விமல் நடித்து தயாரித்த மன்னர் வகையறா படத்திற்கு கடன் கொடுத்த விநியோகஸ்தர் சிங்காரவேலன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அடுத்த பிரச்னை உருவானது.

அதன் பிறகு சிங்காரவேலனும், விமலும் சமரசம் செய்து கொண்டனர். அதன் சாரம்சம்... சிங்காரவேலனுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்கு அவர் தயாரிப்பில் விமல் படம் நடித்து கொடுக்க இருக்கிறார். இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து ஒரு வழியாக படம் வருகிற ஜூலை 5ந் தேதி வெளிவருகிறது.

மூலக்கதை