ஜூலை 5ல் ராட்சசி ரிலீஸ்

தினமலர்  தினமலர்
ஜூலை 5ல் ராட்சசி ரிலீஸ்

அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தணிக்கைக் குழுவுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'ராட்சசி' படத்துக்கு அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்று 'யு' சான்று வழங்கியிருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து ராட்சசி படத்தை ஜூலை 5 ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். 'ராட்சசி' படத்தில் ஜோதிகா ஸ்கூல் டீச்சராக நடித்திருக்கிறார்.

கண்டிப்பான டீச்சரான அவர், மாணவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார். அவருடைய வேகமும் நேர்மையும் சக ஆசிரியர்களுக்கு கடுப்பை ஏற்படுத்த, ஜோதிகாவுக்கு அவர்கள் எவ்வாறு எல்லாம் இடையூறு செய்கிறார்கள். அதை இவர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் ராட்சசி படத்தின் கதையாம். அவருக்கு ஆதரவானவராக பூர்ணிமா பாக்யராஜ் நடிக்க, அவருக்கு இடையூறு செய்பவர்களாக கவிதாபாரதி மற்றும் மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி நடித்துள்ளனர்.

இதே கதைதான் சில வருடங்களுக்கு முன் வெளியான சாட்டை படத்தின் கதையும். சாட்டை படத்தில் சமுத்திரக்கனி ஏற்ற கதாபாத்திரத்துக்குத்தான் சேலைகட்டிவிட்டு ஜோதிகாவாக மாற்றி இருக்கிறார்களாம். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இந்தப்படத்துக்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களில் ஜோதிகா நடித்தாலும் கமர்ஷியலாக அவை பெரிய வெற்றியடையவில்லை. எனவே 'ராட்சசி' படமாவது பெரிய வெற்றியடையுமா என ஜோதிகா எதிர்பார்க்கிறார்.

மூலக்கதை