தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 344 உயர்ந்து, ரூ. 26 ஆயிரத்து 464க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்ததால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது.

இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்ேபாது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3265 ஆக இருந்தது. மாலையில் தங்கத்தின் விலை உயரவில்லை.

ஆனால், இன்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 43 உயர்ந்து, ரூ. 3308க்கு விற்பனையானது. இதனால் சவரன் விலை ரூ. 26 ஆயிரத்து 464க்கு விற்பனையானது.

சவரனுக்கு ரூ. 344 உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு பிறகு நிலைமை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை