நரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருவள்ளூர்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் மூலவர் நரசிம்மர், தாயார் லட்சுமி தேவியை இடது தொடை மீது அமர்த்தி, ஒருவக்கொருவர் அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். 14ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி பிரமோற்சவ விழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டு பிரமோற்சவ விழா இன்று காலை 7. 30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 8 மணிக்கு தேவி, பூதேவி சமேதராக உற்சவர் நரசிம்மர் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் நரசிம்மர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

நாளை மறுதினம் காலை 6 மணிக்கு கருட சேவையும், 29ம் தேதி பல்லக்கு உற்சவமும், 1ம் தேதி தேர் திருவிழாவும், 3ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவையொட்டி தினமும் காலை 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

.

மூலக்கதை