இன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?

லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகளை தோற்கடித்து, 3வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவான நிலையில் இருப்பதால், 5 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், மேலும் தனது ஆதிக்கத்தை தொடர்வதுடன், இந்த ஆட்டத்தில் வென்று அரை இறுதியை உறுதி செய்ய தீவிரம் காட்ட உள்ளது.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், மற்றொரு லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும் தோற்றது.



இதனால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. அப்ேபாதுதான் அரையிறுதிக்குள் எளிதாக நுழைய முடியும்.

அதனால், முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணி முனைப்பு காட்ட உள்ளது. கிரிக்கெட் களத்தில் சமபல எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்துக்கு இப்பொழுது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புள்ளி பட்டியலை பொறுத்தவரை இங்கிலாந்து அணி 6 போட்டிகளை எதிர்கொண்டதில் 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோற்றும் 8 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 6 போட்டியை 5 போட்டியில் வெற்றியும் 1ல் ேதாற்று புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது.

அதனால், இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, 30ம் தேதி இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து அணிகளுடன் மோத வேண்டிய உள்ளதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

.

மூலக்கதை