லஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் மீது புகார் கொடுத்தவருக்கு சரமாரி உதை; கிராம உதவியாளர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
லஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் மீது புகார் கொடுத்தவருக்கு சரமாரி உதை; கிராம உதவியாளர் கைது

செஞ்சி: தாசில்தார் மீது புகார் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த புளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(41).

இவர் அதே ஊரில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்க செஞ்சி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதற்கு அனுமதி மறுத்ததுடன்  8 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மண் எடுக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தாசில்தார் ஆதிபகவன் மீது லஞ்ச ஒழிப்
புத்துறை போலீசாரிடம் வடிவேல் புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஐடியாபடி ரசாயனம் தடவிய பணத்தை தாசில்தாரிடம் வடிவேல் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கம் கிராம உதவியாளர் சங்கர் (41) என்பவர் வடிவேலுவை வழிமறித்து தாசில்தார் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என கூறி மிரட்டியுள்ளார். அவர் மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த சங்கர், வடிவேலை சரமாரி தாக்கியுள்ளனர்.

இது குறித்து வடிவேல் கொடுத்த புகாரின்படி நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கிராம உதவியாளர் சங்கரை கைது செய்தனர்.

.

மூலக்கதை