அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்

தினகரன்  தினகரன்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்

டெல்லி: அமெரிக்க  வெளியுறவு அமைச்சர்  மைக் பாம்பியோ இன்று இந்தியா வரவுள்ள நிலையில் இராணுவத் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ள வகை செய்யும் தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தத்தை இருநாடுகளும் இறுதி செய்யும் நிலையை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்களை இந்தியாவில் தயாரித்ததால் உள்ளிட்ட கூட்டு முயற்சிகளுக்காக அமெரிக்காவிடமிருந்து தொழில்நுட்பங்களை வாங்கவும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக பிக் 29 ரக ஜெட் விமானங்களை பதிலிடும் வகையில் இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வழங்கும் 15 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற லாக்கிட் மார்ட்டின், போயல் ஆகிய இரு நிறுவனங்களும் கடும் போட்டியில் உள்ளன. பிரதமர் மோடியின் \'மேக் இன் இந்தியா\' திட்டத்தின் கீழ் இந்தவிமானங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இன்று இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் மோடியையும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் நாளை சந்தித்து பேச உள்ளார். அப்போது தொழில் துறை பாதுகாப்பு இணைப்பு ஒப்பந்தம் குறித்தும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை