ஏமாற்றம்! படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர்... சேத்துப்பட்டு ஏரியை துார் வாருகிறது மீன்வளத் துறை...

தினமலர்  தினமலர்
ஏமாற்றம்! படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர்... சேத்துப்பட்டு ஏரியை துார் வாருகிறது மீன்வளத் துறை...

சென்னை : சேத்துப்பட்டு ஏரி முழுமையாக வறண்டுள்ளதால், ஏரி பசுமை பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அடுத்த கோடையில், ஏரி வறண்டு போகாமல் இருக்க, ஏரியை துார் வாரும் பணிகளை, மீன்வளத் துறை துவக்கி உள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 பிப்., 27ல், சேத்துப்பட்டு ஏரியில், 42 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, பொழுதுபோக்கு துாண்டில் மீன்பிடிப்பு மற்றும் பசுமை பூங்காவை திறந்து வைத்தார்.துாண்டில்இப்பூங்காவில், துாண்டில் மீன்பிடிப்பு, படகு சவாரி, ஊடக மையம், சிறுவர் விளையாட்டு பூங்கா, வண்ணத்துப் பூச்சிகளை கவர மகரந்த பூங்கா போன்றவை அமைக்கப்பட்டன.

இவை தவிர, நுாற்றுக்கணக்கான செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏரியில், படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், துாண்டில் மீன்பிடிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்காக, அதற்கான வசதிகள் செய்யப்பட்டன.ஏரியைச் சுற்றி, 1.5 கி.மீ., துார நடைபாதை அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் கனவு திட்டமான இந்த பூங்கா, அவர் இருந்த வரை, சிறப்பாக பராமரிப்பட்டது. சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்தது.இந்த ஏரியில், எந்த காலக்கட்டத்திலும் நீர் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடவும் திட்டமிடப்பட்டது.

அப்போது தான், கோடையிலும், ஏரியில் படகு சவாரி நடத்த முடியும். ஆனால், கழிவுநீரை சுத்திகரித்து, ஏரியில் விடும் திட்டத்தை, அதிகாரிகள் இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால், கொளுத்தும் கோடையில், சேத்துப்பட்டு ஏரி, முற்றிலுமாக வற்றியுள்ளது. ஏரியில், நீர் இல்லாததால், படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதை அறியாமல், விடுமுறையை கழிக்க வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணியர், சேத்துப்பட்டு பசுமை பூங்காவிற்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கோரிக்கை அதுமட்டுமின்றி, வெயில் தாக்கத்தால், ஏரியில் உள்ள மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள், ஏரியை துார் வாரும் பணிகளில், தற்போது களம் இறங்கி உள்ளனர்.சேத்துப்பட்டு ஏரியை துார் வாருவதோடு நிறுத்தாமல், மழைநீர் வடிகால்களை ஏரியில் இணைத்து, கழிவுநீர் கலக்காமல், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், அதிகாரிகள் முனைய வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை