எல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019

தினமலர்  தினமலர்
எல்லாமே அப்படியே நடக்குதே... * பாக்., அணி சாதிக்குமா | ஜூன் 24, 2019

 இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடர் ‘ரவுண்டு ராபின்’ முறையில் நடக்கிறது. கடந்த 1992ல் நடந்த தொடரில் இப்படித் தான் 9 அணிகள் மோதின. கடைசியில் பாகிஸ்தான் அணி கோப்பை வென்றது. 

இம்முறை தொடர் துவங்கும் போதே, ‘ரவுண்டு ராபின்’ என்பதால் மீண்டும் பாகிஸ்தான் சாதிக்கும் என நம்பப்பட்டது. இதற்கேற்ப பல விஷயங்கள் 1992 போல அப்படியே நடக்கின்றன. அப்போது போல இம்முறையும் முதல் போட்டியில் பாகிஸ்தான், விண்டீசிடம் தோற்றது. 

2வது போட்டியில் பாகிஸ்தான் (1992, 2019ல்) வென்றது. இரண்டு முறையும் மூன்றாவது போட்டி மழையால் ரத்தாகின. 

இருமுறையும் 4, 5வது போட்டியில் தோற்றது. ஆறாவது போட்டியில் 1992ல் போல, பாகிஸ்தான் மீண்டும் 48 ரன்னில் வெற்றி பெற்றது. அப்போது ஆட்டநாயகன் ஆனது ஆமிர் சோகைல். இம்முறை ஆட்டநாயகன் ஆனது ஹாரிஸ் சோகைல். 

இதனால் மீதமுள்ள போட்டிகளில் சாதித்து 1992ல் போல பாகிஸ்தான் அணி மீண்டும் கோப்பை வெல்லுமா அல்லது சறுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மூலக்கதை