ரயில் விபத்தில், 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
ரயில் விபத்தில், 5 பேர் பலி

புதுடில்லி:மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில், மத்திய அரசு, பீஹார் மற்றும் உத்தர பிரதேச அரசுகள், ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில், மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். முசாபர்புர் மாவட்டத்தில் மட்டும், 126 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர், மனோகர் பிரதாப், உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.டாக்டர்கள் பற்றாக்குறைஅதன் விபரம்:பீஹாரில், ஒன்று முதல் 10 வயதுக்குட்பட்ட நுாற்றுக்கணக்கான குழந்தைகள், மூளைக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். உ.பி.,யிலும், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.இவ்விரு மாநிலங்களிலும், ஆண்டு தோறும், மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கிறது.இவ்விரு மாநிலங்களிலும், டாக்டர்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகளில் குறைபாடு ஆகிய காரணங்களால், குழந்தைகள் பலியானதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.இந்த நோய் பரவுவதை தடுக்க, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்த விழிப்புணர்வை கூட, அவர்கள் ஏற்படுத்தவில்லை.பீஹாரில், அதிக எண்ணிக்கையிலான டாக்டர்களை பணியில் அமர்த்தவும், தீவிர சிகிச்சை பிரிவுகளை உருவாக்கவும், மத்திய, மாநில அரசுகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு, தலா, பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.ஒத்திவைப்புஇந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சஞ்சிவ் கன்னா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மூளை காய்ச்சல் பலி தொடர்பாக, மத்திய அரசு மற்றும் பீஹார், உ.பி., அரசுகள், ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.மேலும், மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள், ஊட்டசத்து, துப்புரவு மற்றும் சுகாதார நிலவரம் குறித்து, பீஹார் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, பத்து நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.
அமைச்சர்களுக்கு எதிராகவிசாரணை
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மாநில அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர், பீஹாரின் முசாபர்புர் நகரில், தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிவிட்டதாக, சமூக ஆர்வலர், தமன்னா ஹஷ்மி என்பவர், முசாபர்புர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, அலட்சியமாக செயல்பட்ட இரு அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்த, உத்தரவிட்டார்.

மூலக்கதை