ரூ.64,700 கோடி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
ரூ.64,700 கோடி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடில்லி: வருமான வரித் துறை, நடப்பு நிதியாண்டில், இதுவரை, 64 ஆயிரத்து 700 கோடி ரூபாய், ‘ரீபண்டு’ வழங்கியுள்ளது என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், 1ம் தேதியிலிருந்து, ஜூன், 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வருமான வரித் துறை, 64 ஆயிரத்து 700 கோடி ரூபாயை, ரீபண்டாக வழங்கி உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம், 1.61 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த, 2018 – 19 மதிப்பீட்டு ஆண்டில், 6.49 கோடி படிவங்கள், மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இதுவே, 2017 – 18ம் ஆண்டில், 5.47 கோடியாக இருந்தது. ஒப்பீட்டில், 18.65 சதவீதம் அதிகரித்துள்ளது. வருமான வரியை செலுத்தும் அனைவருக்கும், ரீபண்டு வழங்குவதற்கு, இந்த அரசு, முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை