ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் இலக்கு

சவுத்தாம்ப்டன்:ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் முஷ்பிகுர், சாகிப் அல் ஹசன் அரைசதம் அடிக்க, வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது.



இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.


'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களம் இறங்கிய வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் (16), தமிம் இக்பால் (36) ஏமாற்றினர், சாகிப் அல் ஹசன் 51 ரன் எடுத்தார். சவுமியா சர்கார் (3), மகமதுல்லா (27) சொதப்பிய போதும், முஷ்பிகுர் அரைசதம் எட்டினார். இவர் 83 ரன்னுக்கு அவுட்டானார். கடைசி பந்தில் மொசாதெக் (35) போல்டானார்.வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜீப் அர் ரஹ்மான் 3, குல்பதீன் 2 விக்கெட் சாய்த்தனர்.

மூலக்கதை