அதிகரிப்பு! மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி

தினமலர்  தினமலர்
அதிகரிப்பு! மதுரை போலீசார் தற்கொலை செய்வது ... ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 பேர் பலி

மதுரை : போலீசாருக்கு பணிச்சுமை, குடும்ப பிரச்னை போன்றவைகளால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கின்றனர். சிலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இதனால் அவர்களின் குடும்பம் பரிதவிக்கிறது. இதை தவிர்க்க போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.

இருப்பினும் தற்கொலையை தடுக்க முடியவில்லை. இதில் மதுரை போலீசாருக்கு சித்திரை திருவிழா, தேர்தல் திருவிழா என ஓய்வின்றி அடுத்தடுத்து பாதுகாப்பு பணி வழங்கப்பட்டதால் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகினர்.சிலரது வீட்டில் கணவரின் பணிச்சுமையை புரிந்துக்கொள்ளாமல் குடும்ப பிரச்னையை மனைவி பெரிதுபடுத்துவதால் மனஅழுத்தம் அதிகமாகி தவறான முடிவை எடுக்கின்றனர். மேலும் அடுத்தடுத்து பணி, சிறிது நேரம் ஓய்வு, உறவினர்கள் இல்ல விழாக்களில் ஒருநாள் முழுவதும் குடும்பத்துடன் செலவழிக்க முடியாமை போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் ஏற்பட்டு விபரீத முடிவை எடுக்கின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய சூழலில் பணிச்சுமை என்பது அதிகம் இல்லை. தேவையான ஓய்வு வழங்கப்படுகிறது. இதுவரை நடந்த தற்கொலையில் குடும்பம் சார்ந்த பிரச்னைகள் அதிகம். போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மனஅழுத்தத்தை போக்க பயிற்சியளிக்கப்படுகிறது. மனஅழுத்தத்திற்கு ஆளான போலீசார், பயிற்சி அளிக்கும் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் தேவையான கவுன்சிலிங் அளிக்கப்படும் என்றார்.

மூலக்கதை