நிடி ஆயோக் மீது பாய்ந்த டி.வி.எஸ்., மோட்டார்

தினமலர்  தினமலர்
நிடி ஆயோக் மீது பாய்ந்த டி.வி.எஸ்., மோட்டார்

புதுடில்லி: ‘இருசக்கர வாகன தயாரிப்பை, 100 சதவீதம், மின் வாகனமாக மாற்றுவது என்பது, ஆதார் அட்டையை மாற்றுவது போல, அவ்வளவு சுலபமான விஷயமில்லை’ என, நிடி ஆயோக்குக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்.

‘வரும், 2025ல், முழுவதுமாக மின் வாகனமாக மாற்றுவதற்கான உறுதியான திட்டங்களை, இரு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும்’ என, கடந்த வாரம், வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் நிடி ஆயோக் கேட்டிருந்தது.

இதுகுறித்து, டி.வி.எஸ்., மோட்டார் தலைவர், வேணு சீனிவாசன் கூறியதாவது:முழுவதும் மின்வாகனமாக மாற்றுவது என்பது, ஆதார் அட்டையோ, மென்பொருளோ போன்றதல்ல; உடனடியாக மாற்ற முடியாது. இதற்கான வினியோக அமைப்பையும் முழுவதுமாக மாற்ற வேண்டியதிருக்கும். நான்கு மாதங்களில் ,திட்டத்துடன் வருவதாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை