அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவால் தங்கம் சவரனுக்கு ரூ.528 அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவால் தங்கம் சவரனுக்கு ரூ.528 அதிகரிப்பு

* 3 நாட்களில் ரூ.648 எகிறியது * சவரன் ரூ.25,704ஐ எட்டியதுசென்னை: சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.528 அதிகரித்து, 25,704 ரூபாயை எட்டியது. மேலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.648 உயர்ந்துள்ளது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி நெருங்கும் முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.24,000ஐ தாண்டியது. கடந்த ஜனவரி மாதம் வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால் ஜனவரி 28ம் தேதி வர்த்தக முடிவில் சவரன் ரூ.25,016க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு மார்ச் மாதம் 2ம் தேதி வரை தங்கம் சவரன் ரூ.25,000க்கு மேல் நீடித்தது. பின்னர் தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வந்ததால் கடந்த 14ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.25,288க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் நேற்று ஆபரண தங்கம் நேற்று ஒரே நாளில் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.25,688க்கு விற்பனையானது. மாலையில் மேலும் உயர்ந்து கிராம் ரூ.3,213க்கும்,  சவரன் ரூ.25,704க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 20ம் தேதி சவரன் ரூ.25,808 விற்பனையானது அதிகபட்ச அளவாக இருந்தது.இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘ அமெரிக்க பெடரல் வங்கி கூட்டமைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மாறாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததால் சர்வதேச சந்தையில் ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர் வரை உயர்ந்தது. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. இதுதவிர, அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப்போர் ஏற்படுவதற்கான சூழல் காணப்படுவதும் இதற்கு காரணம்’’ என்றார். அதேநேரத்தில், பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றமுடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 489 புள்ளிகள் உயர்ந்து 39,602 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 140 புள்ளி உயர்ந்து 11,832 ஆகவும் இருந்தது.சர்வதேச சந்தையில் நேற்று தங்கம் விலை மாற்றம்:*சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (30.103 கிராம்) தங்கம் 1,385 டாலரை தாண்டியது.* பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யாததால் தங்கத்தில் முதலீடு குவிந்து, ஒரே நாளில் உயர்ந்துள்ளது.* இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தங்கம் சவரன் ரூ.25,808க்கு விற்பனையானது.* தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு  ரூ.648 உயர்ந்துள்ளது.

மூலக்கதை