திருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
திருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பொழியூரை சேர்ந்த 17 வயது மாணவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவனின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் தகராறு செய்வது. டிவியை உடைப்பது. பெற்றோரை தாக்க முயற்சிப்பது ஆகியவற்றால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாணவனிடம் விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தவகல்கள் வெளியாயின. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறையை கொண்டாட மாணவன் அருகில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சித்தி வீட்டின் அருகே வசிக்கும் 45 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அதன்பிறகு தினமும் வீட்டுக்கு வரவழைத்து மாணவனை பலாத்காரம் செய்துள்ளார். கோடை விடுமுறை முடிந்த பிறகு வழக்கம் போல் மாணவன் வீட்டுக்கு சென்றார். இருப்பினும் மாணவன் அவ்வப்போது பள்ளிக்கு செல்லாமல் அந்த பெண் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சித்தி வீட்டில் தங்கி படிக்க போவதாக பெற்ேறாரிடம் கூறியுள்ளார். இதை கேட்ட பெற்றோரோ மறுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த மாணவன் வீட்டில் தகராறு செய்து வந்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு குழந்தைகள் நல அமைப்பினர் பொழியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் உண்மை என் தெரியவந்தது. நேற்று மாணவனை திருவனந்தபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர். அதைத்தொடர்ந்து மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக போலீசார் ேபாக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இன்று அல்லது நாளை அந்த பெண் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூலக்கதை