ரூ.10 கோடி! குழந்தைகள் நல பரிசு பெட்டக செலவு... மாவட்டத்தில் 51 ஆயிரம் பேருக்கு வழங்கல்

தினமலர்  தினமலர்
ரூ.10 கோடி! குழந்தைகள் நல பரிசு பெட்டக செலவு... மாவட்டத்தில் 51 ஆயிரம் பேருக்கு வழங்கல்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், 2015 முதல் 2019ம் ஆண்டு வரை, 51 ஆயிரத்து 153 பேர் பயனடைந்துள்ளனர்.
ரூ.10 கோடியே 23 லட்சத்து 6 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.இந்திய அரசின் ' பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், இந்திய அளவில் ஆண், பெண் விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ள 100 மாவட்டங்களில், 24.1.2015 அன்று துவங்கப்பட்டது. மேற்கண்ட 100 மாவட்டங்களில், தமிழகத்தில் ஆண், பெண் விதிதாச்சாரம் மிக குறைவாக இருந்த கடலுார் மாவட்டம் மட்டும், இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. அதே தினத்தில், பண்ருட்டி வட்டாரம், மருங்கூர் கிராமத்தில், இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பாலின பாகுபாட்டை குறைத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் சமுதாய பங்கேற்பினை உறுதி செய்தல், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறாமல் இருத்தல், பாலின தேர்வை தடை செய்தல், சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கம்.கலெக்டர் அன்புச்செல்வன் மேற்கொண்ட தீவிர முயற்சியால், இத்திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள், கடலுார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், தற்போது பெண் குழந்தைகளின் பாலின விகிதம், கடலுார் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.பெண் குழந்தைகள் பிறப்பினை கொண்டாடும் வகையில், 2015ம் ஆண்டு முதல், மாதந்தோறும் 7 ம் தேதி, கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தை மற்றும் தாயாரை பாராட்டி சான்றிதழ், மரக்கன்றுகள் மற்றும் அம்மா பரிசு பெட்டகம் ஆகியவை, கலெக்டர்மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்தில், 2015-2016ம் ஆண்டில்91 ஆயிரத்து 217 பயனாளிகளுக்கு ரூ. ஒருகோடியே 84 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், 2016-2017ம் ஆண்டில் 13 ஆயிரத்து 873பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 77 லட்சத்து 46ஆயிரம், 2017-2018ல் 12 ஆயிரத்து 214 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 44 லட்சத்து 28 ஆயிரம், 2018-2019ல் 12 ஆயிரத்து 785பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 55 லட்சத்து 70 ஆயிரம், 2019 மே மாதம் வரை 3 ஆயிரத்து 64 பயனாளிகளுக்கு ரூ. 61 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், மொத்தம் 51 ஆயிரத்து 153 பயனாளிகளுக்கு, ரூ.10 கோடியே 23 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை