மகளிர் உலக கோப்பை கால்பந்து ஜப்பானை வீழ்த்திய இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை கால்பந்து ஜப்பானை வீழ்த்திய இங்கிலாந்து

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 8வது மகளிர் உலக கோப்பை போட்டி நடைப்பெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகளில் நேற்று அதிகாலை டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் மோதின. முதல் போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணிக்காக 2 கோல்கள் அடித்த  எலன் ஒயிட் போட்டியின் சிறந்த வீராங்கனையாக  தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் தோற்றாலும் டி பிரிவில் 2வது இடம் பிடித்ததால் ஜப்பான் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டி பிரிவின் இன்னொரு போட்டியில் ஸ்காட்லாந்து- அர்ஜென்டீனா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஸ்காட்காலந்து அணி வேகம் காட்டியது. போட்டியின் 19 வது நிமிடத்தில் கிம் லிட்டில், 49வது நிமிடத்தில் ஜென்னி பேட்டி, 69வது நிமிடத்தில் எரின் கூத்பெர்ட் ஆகியோர் கோல் அடித்தனர். அதனால்  3-0 என்ற கோல் கணக்கில்  முன்னிலைப் பெற்ற ஸ்காட்லாந்து வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தது.ஆனால் போட்டியின்74வது நிமிடத்தில்  அர்ஜென்டீனாவின்  மிக்காகிரெஸ் ஒரு கோல் அடித்தார். அடுத்து 79வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின்  ஃபுளோரென்சியா கோல் அடிக்க முயல அதை ஸ்காட்லாந்தின் கோல் கீப்பர லீ அலெக்சாண்டர் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் மீறி அது சுய கோல் ஆனது. அதனால் ஸ்காட்லாந்து அணி அதிர்ச்சி அடைந்தது.  அந்த அதிர்ச்சியை அதிகரிக்கும் வகையில், தாமதம் காரணமாக வழங்கப்படும் கூடுதல் நேரத்தில்  ஃபுளோரென்சியா ஒரு கோல் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனால் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது. வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்ட ஸ்காட்லாந்து வீராங்கனைகள் கதறி அழுதனர்.புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெருந்தாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்காது. அர்ஜனெடீனா வெற்றி பெற்று இருந்தால் ஜப்பானுக்கு பதில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்து இருக்கும். லீக் சுற்றுப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலையுடன் முடிகின்றன. அடுத்து நாக் அவுட் சுற்றுகள் ஜூன் 22, 23, 24, 25 தேதிகளில் நடைபெறும்.

மூலக்கதை