மஹாரஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 பதிவு

தினகரன்  தினகரன்
மஹாரஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 பதிவு

சதாரா: மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டதில் இன்று காலை 7.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தனர். அதிஷ்டவசமாக எந்தவித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதேபோல, நேற்று மாலை மேற்கு ஒடிசாவில் லேசான பூகம்பம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலநடுக்கம், மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர், தியோகர், மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களிலும், மேற்கு பிராந்தியத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று மாலை 5.48 மணியளவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் பகுதி மக்கள் சிலர் கூறியதாவது, \' நேற்று தங்கள் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஒரு சில நொடிகளுக்கு நிலநடுக்கத்தை தெளிவாக உணர்ந்ததாக கூறியுள்ளனர்.\' இது தொடர்பாக, புவனேஸ்வர் மைய இயக்குனர் எச்.ஆர். பிஸ்வாஸ் கூறியதாவது, \' மேற்கு ஒடிசாவில் ஏற்பட்ட நடுக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை\' என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை